மைதான ஊழியர்கள், ரசிகர்களிடம் அன்பை பகிர்ந்து கொண்ட டோனி ! படம் உள்ளே

0

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சேப்பாக் மைதானத்தில் சென்னை அணியின் தரைவர் டோனி மைதானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 50-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டியிட்டன.

இந்தநிலையில் ஆட்டம் முடிந்தவுடன் சென்னை அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி மைதானத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் ரசிகர்களிடம் தனது அன்பை பகிர்ந்து கொண்டார்.

மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் தோன்றிய டோனி மைதானத்தில் இருந்து கொண்டு ரசிகர்களை நோக்கி டென்னிஸ் மட்டையின் மூலம் பந்துகளை அளித்த நிகழ்ச்சி மைதானத்தில் இருந்த அனைவரையும் குதூகலப்படுத்தியது. அரங்கமே எழுந்து நின்று, கைதட்டலுடன் ஆரவாரம் செய்தது.

மேலும் சென்னை அணியின் வீரர்கள் ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், ராயுடு, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு ரீ-சர்ட், சென்னை அணியின் தொப்பி மற்றும் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசாக அளித்தனர். இந்த நிகழ்ச்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்பு நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது தேசிய கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனிக்கு பாராட்டு குவிந்தது நினைவிருக்கலாம்.

ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிப்பது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிட்டும்.

புள்ளி பட்டியலில் 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 7-வது இடத்தை வகித்த சென்னை அணி நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதன் ஊடாக புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டியுள்ளது.

ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி மற்றும் சவுரவ் கங்குலியின் ஆலோசனையின் மூலம் டெல்லி அணி இந்த சீசனில் மிகப்பெரிய எழுச்சி பெற்று இருக்கிறது. 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 5 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு வந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.