வருகின்றது பயங்கரவாதி சஹ்ரானின் DNA அறிக்கை!

0

தற்கொலை குண்டு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ளது.

அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களம் இதை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான பரிசோதனைகள் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

சஹ்ரானின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக, அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரின் இரத்த மாதிரிகளை அரச இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், குறித்த தகவல்கள் அடங்கிய முழுமையான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.