வீரர்களுக்கு டோனியின் தண்டனை இது தான் ! முதல் முறையாக கூறிய ஆலோசகர்

0

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பார் என்பதை அணியின் முன்னாள் மனநிலை ஆலோசகர் பேடி அப்டான் தன்னுடைய புத்தகத்தில் கூறியுள்ளார்.

உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் அடுத்த உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகின்றனர்.

டோனி கூட ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிவுக்கு பின்னர், இப்போது இந்த தோல்வியை பற்றி எல்லாம் ஆராய முடியாது, உலகக்கோப்பையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் மனநிலை ஆலோசகர் பேடி அப்டான், தனது அனுபவங்களைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.

Barefoot எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தக அறிமுக விழா கொல்கத்தாவில் நடைபெற்றது.

இந்தப் புத்தகத்தில் இந்திய அணிக்கு ஆலோசகராகச் செயல்பட்டது தொடங்கி வீரர்களின் செயல்பாடு எனப் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக டோனியைப் பற்றி சில தகவல்களை பகிர்ந்துள்ளார், அதில், நான் அணியில் சேரும்போது டெஸ்ட் போட்டிகளுக்கு அனில் கும்ப்ளே தலைவராகவும், ஒருநாள் போட்டிகளுக்கு டோனி தலைவராகவும் இருந்தார்.

அப்போது பயிற்சியில் சில விஷயங்கள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படும், அதன் படி பயிற்சி மற்றும் அணியின் மீட்டிங்கு தாமதமாக வரக் கூடாது என ஸ்ட்ரிக்டாகச் சொல்லப்பட்டது.

இது குறித்து ஆலோசனையும் செய்தோம், அதன் பின் இறுதியாக அணியின் தலைவர்கள் முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டோம்.

அதன் படி டெஸ்ட் போட்டி கேப்டன் கும்ப்ளே தாமதமாக வரும் வீரர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமாகக் கட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பின்பு இது தொடர்பாக டோனியிடம் விவாதித்த போது, அவரும் கண்டிப்பாக தண்டனை இருக்க வேண்டும். யாராவது தாமதமாக வந்தால், அணியில் இருக்கும் அனைவரும் தலா 10,000 அபராதமாகக் கட்ட வேண்டும் என வித்தியாசமாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

அந்த அறிவிப்பு வெளியான முதல் யாரும் தாமதமாக வரவில்லை என்று பேடி அப்டான் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.