இவ்வளவு அழகாக நயன்தாராவை பார்த்துள்ளீர்களா? விக்னேஷ் சிவன் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்

0

கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு பறந்து விடுகிறார்.

பெரும்பாலும் அவர்கள் அமெரிக்காவுக்கு தான் செல்வார்கள். இந்நிலையில் இம்முறை கொஞ்சம் வித்தியாசமாக கிரீஸுக்கு சென்றுள்ளனர். கிரேக்க தீவான சான்டோரினிக்கு அழகுத் தீவான நயன்தாராவுடன் சென்றுள்ளார் விக்னேஷ் சிவன்.

ஊர் சுற்ற சென்ற இடத்தில் எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டிருக்கிறார். விக்னேஷ் சிவன் எப்பொழுது நயன்தாராவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் அதை பார்த்து கடுப்பாகும் சிங்கிள்ஸ், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்தும் பயங்கர கடுப்பாகியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.