எனக்கும் உணர்ச்சிகள் உண்டு ! கணவர் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் ! மனம் திறந்த பிரபல நடிகை !

0

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பெண்ணாகவும், கிராமத்து பெண் வேடங்களும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் மைனா நந்தினி.. இவர் முதல் கணவர் இறந்த சில மாதங்களிலேயே தற்போது இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

வம்சம் படத்தில் மூலம் அறிமுகமானவர் தான் நந்தினி. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்தார்.. மேலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடர்மூலம் பிரபலமானார்.

அந்தத் தொடரில், ‘மைனா’ என்ற கேரக்டரில் நடித்ததால் அவர் பெயருக்கு முன்பு ‘மைனா’ புகழ் ஒட்டிக்கொள்ள, மைனா நந்தினி என்ற பெயர் வந்தது..

இவர் சென்னையில் ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து, இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். பின்னர் நந்தினி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ஒருநாள் கணவன் கார்த்திகேயன் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால் நந்தினி கணவர் இறந்த விஷயம் அறிந்தும் கூட கணவரின் உடலைப் பார்க்கச் செல்லவில்லை என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், மற்றொரு தரப்பினர் நந்தினியை அவரது கணவரின் உடலைப் பார்க்க கார்த்தியின் உறவினர்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறினார்.

கணவர் இறந்ததை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத நந்தினி, தொடர்ந்து தனது கணவர் இறந்த சில நாட்களிலேயே அவர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்கத் தொடங்கினார்.

கார்த்தியின் மரணத்திற்குக் காரணம், நந்தினியின் தந்தை தான் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், நந்தினியின் மாமியார் இவரைப் பற்றிய பல பகீர் தகவல்களை வெளியிட்டார். தொடர்ந்து நந்தினியும் அவருடைய பங்கிற்கு கார்த்தி, கடன் பெற்றிருந்ததாகவும், தன்னிடமும் நகை, பணத்தை வாங்கி ஏமாற்றியதாகவும் கூறினார்.

ஒரு வழியாக இந்தப் பிரச்சனைகள் முடிவிற்கு வந்தாலும் கணவர் இறந்து 6 மாதம் கூட ஆகாத நிலையில் பிரபல தொலைக்காட்சியில் இவர் மிகவும் மாடர்ன்னாக வந்து குத்தாட்டம் போட்டது அனைத்து தரப்பு ரசிகர்களையும் விமர்சிக்க வைத்தது.

இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகிவிட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இவரும் இதே தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வருவதாகவும் அவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளதாகவும் கிசுகிசுக்கள் உலாவந்தது வந்தது.

இரண்டாவது திருமணம் பற்றி மைனா நந்தினி கூறுகையில்;
எனக்கு யோகேஷை 2013-ல இருந்தே தெரியும். ஆனா கடைசி ஒரு வருஷமா தான் ரொம்ப க்ளோஸா இருக்கோம். உனக்குன்னு ஒரு லைஃப் வேணாமா, நடந்ததெல்லாம் மறந்துட்டு கடந்து போன்னு சொன்னாங்க. ஆனா எப்போவும் என் கிட்ட கேரிங்கா இருப்பாங்க. சோ நான் ஒரு நல்ல ஃபிரெண்டா தான் நினைச்சிட்டு இருந்தேன்.

திடீரென்று கடந்த ஜனவரி மாசம் அவங்க அப்பா, அம்மா என்ன பார்க்க வந்தவங்க, உன்னை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. எனக்கு பயங்கர ஷாக். ரெண்டு வீட்லயும் பேசிருக்காங்க. கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.