குழந்தை பிறந்து ஒரு சில நாட்களிலேயே அக்குழந்தைக்கு புதிய தொழில்நுட்பத்தின் கீழ் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பெற்றுக்கொக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த இலக்கம் பிறப்புச்சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவருக்கு பல அடையாள அட்டைகள் வைத்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கவும், ஒரே அடையாள அட்டையில் பலருக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதை தவிர்க்கவும் இந்த புதிய நடைமுறை உதவும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.