கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அடித்து கொன்ற கொடூர நபர்! இலங்கையில் நடந்த சம்பவம்

0

பெண்ணொருவரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி முன்னிலையில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொலைச் சந்தேக நபர் நீதிமன்றத்தில் பொலிசாரால் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பண்டாரவளை வடக்கு கெபில்லவெலையைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான ராலினி மல்லிகா என்பவரே கொலை செய்யப்பட்டார்.

குறித்த பெண்ணிடமிருந்து முப்பதாயிரம் ரூபாவைக் கடனாகப் பெற்ற கொலையாளி அப் பணத்தை மீள வழங்காது தட்டிக் கழித்து வந்துள்ளார்.

இதையடுத்து அப் பெண்ணுக்கும் குறித்த நபருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. இவ்வாறு தர்க்கம் முற்றவே அந்த நபர் இப்பெண்ணைத் தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட இப்பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்கப்பட்டதினாலேயே குறித்த மரணம் சம்பவித்திருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதினால் அப்பெண்ணைத் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது நீதிபதி அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.