டிரம்ப் ஒருவார கால பயணமாக லண்டன் விஜயம்!

0

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகளின் கூட்டுப்படை பிரான்ஸ் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள நார்மான்டி கடல்பகுதியில் 6-6-1944 அன்று காலடித்தடம் பதித்தது. இந்த நாளை பிரிட்டன் ஆட்சியாளர்கள் அப்போது ‘டி-டே’ என்று குறிப்பிட்டனர்.

இதைதொடர்ந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஆறாம் தேதியை பிரிட்டன் அரசு ‘டி-டே’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரிட்டன் நாட்டில் ஒருவார அரசுமுறை பயணமாக இன்று குடும்பத்தாருடன் லண்டன் வந்தடைந்தார்.

இந்த பயணத்தின்போது பக்கிங்காம் அரண்மனையில் ராணி எலிசபெத் அளிக்கும் சிறப்பு வரவேற்பு மற்றும் விருந்தில் பங்கேற்கும் டிரம்ப், இளவரசர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தினரை சந்திக்கிறார்.

‘டி-டே’ ஆக்கிரமிப்பை நினைவுகூரும் வகையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள அமெரிக்க நார்மன்டி கல்லறையில் வரும் ஆறாம் தேதி நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்கும் டிரம்ப், முதல்முறையாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

பிரெக்சிட் விவகாரத்தில் உள்கட்சியில் பெரும் சூறாவளியை எதிர்கொண்டு வரும் 7-ம் தேதி ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரசா மே மற்றும் பல முக்கிய பிரமுகர்களையும் டிரம்ப் சந்தித்துப் பேசவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.