தலிபான்கள் மீது அதிரடி தாக்குதல் – பாதுகாப்பு படையினர் உட்பட 34 பேர் மீட்பு!

0

ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். இதனை தொடர்ந்து தலிபன் பயங்கரவாதிகள் வசம் உள்ள பகுதிகளை மீட்க வான்வழி மற்றும் தரைவழி மார்கமாக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் பிடியிலிருந்து இராணுவ வீரர்கள் உட்பட 34 பேர் மீட்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஏதிரான  தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக கடந்த திங்கள் கிழமை (ஜூன் 9) பஹ்லான் மாகாணத்தில் ரானுவம் அதிரடி தேடுதல் வேட்டையினை மேற்கொண்டது. அந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட 34 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 34 பேரில் 17 பேர் பொது மக்கள் எனவும் எஞ்சிய 17 பேர் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் ஆவர்.

Leave A Reply

Your email address will not be published.