தலையில் சன்னங்களைச் சுமந்து இறுதிவரை போராடிய ஜெயந்தன் படையணி வீரன்!

0

தாயகத்தில் நிகழ்ந்த போர் ஆயிரமாயிரம் மக்களையும் விடுதலைப்போராட்ட வீரர்களையும் இன்று நிர்க்கதியாக்கிச் சென்றுள்ளது.

வடக்கு கிழக்கு என தமிழர் தேசமெங்கும் பரந்து வாழுகின்ற அத்தனை மக்களிடத்திலும் இந்த போரின் தாக்கம் சொல்லெணாத் துயரை விட்டுச் சென்றாலும் அந்த துயரத்திலிருந்து விடுபட்டு வாழ்க்கையை நகர்த்திச் செல்வதற்காக அன்றாடம் போராடிக்கொண்டிருக்கும் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அந்த வகையில் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி வாரந்தோறும் வழங்கிவரும் உறவுப்பாலம் நிகழ்ச்சியினடிப்படையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்திலிருக்கக்கூடிய பொத்துவில் குண்டுமேடு என்ற கிராமத்தில் வசிக்கும் முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரது துயர் நிறைந்த வாழ்வை எடுத்துக்காட்டுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் செறிந்த படையணியாக இருந்த ஜெயந்தன் படையணியின் முன்னாள் போராட்ட வீரரின் போருக்குப் பிந்திய வாழ்வியல் இந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டுள்ளது.

16 வருடங்களாக தாயக விடுதலைப் போராளியாக போரிட்டதுடன் கடந்த 2000ஆம் ஆண்டு யுத்த களத்தில் தலையில் அடிபட்ட சன்னங்கள் காரணமாக அவரது இடது கை பாதிக்கப்படுள்ளது.

அதற்கான மருத்துவ வசதியினைப் பெறுவதற்கு இருக்கக்கூடிய இடர்பாடுகள் சமூகத்திலுள்ள பகுபாடுகள் என அனைத்தும் தனது நீண்ட ஆண்டு உடலியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தடைக்கற்களாக உள்ளதாக கூறுகின்றார்.

குடும்ப வறுமையின் மத்தியிலும் வாழ்க்கையை வெற்றிகொள்வேன் என்ற நம்பிக்கையில் மூன்று பிள்ளைகளுடன் வாழும் இந்த முன்னாள் போராட்ட வீரருக்கு உதவி செய்யும் நல்லுள்ளம் படைத்தவர்கள் +94212030600 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளமுடியும்.

Leave A Reply

Your email address will not be published.