தவறு செய்தவர் ஜனாதிபதியாக இருந்தாலும் தண்டனை தான்! அமைச்சர் மனோ கணேசன்

0

தவறு செய்தவர் ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்குத் தண்டனை வழங்கப்படுமென தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்குளி – அலிவத்த பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி யம்மன் ஆலயத்தின் புதிய கட்டடத் திற்கான அடிக்கல் நடும் விழா நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங் களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலெம் தெரிவிக்கையில், “நாட்டில் தற்போது தோன்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதப் பிரச்சினையை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். அதனை துடைத்தெறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அது ஜனாதிபதியோ, பிரதமரோ, ரிஷாத் பதியுதீனோ அல்லது நானாக இருந்தாலும் தண்டனை வழங்கப்படும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.