தீவிர போராட்டம் வெடிக்கும் – கருணா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

0

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்த கோருவது அடிப்படை நியாயமே. இவற்றுக்கு தடையாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தடையாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களது ஏகாதிபத்திய போக்கை வெளிக்காட்டுகின்றனர். இதனை அடக்காவிட்டால் நாடு பூராகவும் போராட்டம் வெடிக்கும் என கருணா அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உரிய முறையில் தரமுயத்தி தர கோரி மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.

கல்முனை தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டக் களத்திற்கு கலந்துகொள்ள வருகை தந்ததாகவும் கருணா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழர்கள் அனைவரும் அணிதிரண்டு ஒற்றுமையாக போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் இல்லையெனில் இந்த நாடு பாரிய போராட்டங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.