நாளை மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதனின் இறுதிக் கிரியை!

0

தமிழ் பத்திரிகைத்துறையின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன், நேற்று (26) புதன்கிழமை காலமானார்.

பத்திரிகைத் துறையில் கடமையாற்றி பின்னாளில் இலத்திரனியல் ஊடகத்தில் பிரபலமாகி பின்னர் மீண்டும் அச்சுத் துறைக்கு வந்து கோலோச்சியவர். தினகரன், வீரகேசரி, சக்தி TV உள்ளிட்ட பல ஊடகங்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் பூதவுடல் இன்று பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை பொரளை கனத்தையில் தகனம் செய்யப்படும் என அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.