நாளை மோடி கொழும்பு விஜயம் !விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை ஞாயிற்றுக்கிழமை குறுகிய நேர விஜயம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வரவுள்ளார்.

இன்று சனிக்கிழமை மாலைதீவு செல்லும் இந்தியப் பிரதமர், நாளை ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து திரும்பும் வழியில் கொழும்பிற்கு வந்து செல்லவுள்ளார்.

இவரின் பயணத்தையொட்டி கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சில வீதிகளும் மூடப்படவுள்ளன.

கொழும்பில் 4 மணித்தியாலங்கள் வரையில் அவர் தங்கியிருக்கவுள்ளதுடன் இதன்போது ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவற்றின் தலைவர்களையும் அவர் கொழும்பில் சந்திப்பார்.

Leave A Reply

Your email address will not be published.