பாகிஸ்தானுக்கு 337 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

0

நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 22ஆவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மஞ்செஸ்ரரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு 337 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ரோஹித் சர்மாவின் சிறப்பான சதத்துடன் 336 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இதனிடையே, இந்திய அணி 45 ஓவர்கள் பந்துப் பரிமாற்றங்கள் முடிந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி சற்று நேரம் தாமதமானதுடன் பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி முடித்துள்ளது.

அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை இந்திய அணி பெற்றுள்ளது.

அணி சார்பாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 3 ஆறு ஓட்டங்கள், 14 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன் விராட் கோஹ்லி 77 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் சார்பாக, மொஹம்மட் அமிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, ஹசன் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி 337 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.