மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்திற்கு ரதன தேரர் விஜயம்!

0

மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகத்தினை பார்வையிடுவதற்காக பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் தேரருக்கு பல்கலைக்கழகத்திற்குள் செல்வதற்கு அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக ரதன தேரர் பல்கலைக்கழக நுழைவாயில் பகுதியில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் ரதன தேரர் உள்ளிட்ட குழுவினரை பலவந்தமாக உள்ளே அழைத்து செல்ல முற்பட்ட வேளையில் அதனை இராணுவ அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் இராணுவ அதிகாரிகளால் ரதன தேரர் உள்ளிட்ட 10 தேரர்கள் அடங்கிய குழுவினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.