மரபனு பகுப்பாய்வுக்காக சஹ்ரான் குடும்பத்தினரின் சடலங்கள் தோண்டி எடுப்பு !

0

இதனையடுத்து நடந்த துப்பாக்கிச் சண்டையிலும், தற்கொலைக் குண்டுகளை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தமையின் காரணமாகவும் அந்த வீட்டில் தங்கியிருந்த 15 பேர் உயிழரிந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சஹ்ரானின் இரண்டு சகோரரர்களும் தந்தையும் அடங்குவர்.

எவ்வாறாயினும், தற்கொலைக் குண்டுகள் வெடித்த வீட்டிலிருந்து, சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் காயப்பட்ட நிலையில் தப்பித்தமை நினைவுகொள்ளத்ததக்கது.

இதன் பின்னர், உயிரிழந்த பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு முஸ்லிம்கள் முன்வராமை காரணமாக, இஸ்லாமிய மதச் சடங்குகளின்றி, அந்த சடலங்கள் அம்பாறையில் புதைக்கப்பட்டன.

இருந்தபோதும், அந்தக் குண்டு வெடிப்பின்போது பலியான சஹ்ரான் தரப்பினரின் குழந்தைகளின் உடல்கள் மட்டும், இஸ்லாமிய மதச் சடங்களுடன் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த அனர்த்தத்தில் 06 குழந்தைகள் பலியாகியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.