முல்லைத்தீவு மாவட்டத்தில் கிராம அலுவலரை அச்சுறுத்திய படையினர் !

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச உத்தியோகத்தரான கிராம சேவையாளர் ஒருவர் படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில் 07.06.19 அன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வண்ணாங்குளம் நகர்பகுதியில் இருக்கின்ற கிராம சேவாகர் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியில் வரும்போது மூன்று படையினர் வீதியில் மறித்துள்ளார்கள் அப்போது கிராமசேவகர் தெரிவித்துள்ளார் நான் ஒரு கிராம சேவகர் கல்வி கற்கின்ற நடவடிக்கையினை செய்கின்றேன் அருகில் உள்ள கல்வி நிலையத்திற்கு சென்று எனது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று ஆனால் அந்த கிராம சேவகரை சிறீலங்கா படையினர் மறித்து அவரை செல்லமுடியாது தாக்க முற்பட்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த அவசர காலதடைச்சட்டத்தினை பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளமுடியாத ஜனநாயகம் அற்ற முறையில் செயற்படும் சம்பவங்கள் வடக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்த விடையம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சும் அரசாங்கமும் ஒருவிதமான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.