முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் – மகாநாயக்கர்கள் இன்று சந்திப்பு!

0

அரசாங்கத்திலுள்ள அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (11) மகாநாயக்க தேரர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தவர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருந்தால், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தனர். மகாநாயக்கர்களும் பதவி விலகிய முஸ்லிம் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க தயாராகவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.