ரஜினி என்ற சமூகவிரோதியை வைத்து படம் எடுத்துவிட்டு புலிகள் பற்றி பேச என்ன அருகதை உண்டு?

0

கபாலி, காலா போன்ற திரைப்படங்களை நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய இயக்குனர் ரஞ்சித், தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தனக்கு விமர்சனம் இருப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு ரஞ்சித் தெரிவித்திருப்பது தமிழக தமிழர்களிடம் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதற்கு இயக்குனர் ரஞ்சித்துக்கு என்ன அருகதை இருக்கிறது என்பதை முதலாவது கேள்வியாகும். ரஜினி என்ற ஆளும் இந்திய அரசின் அடிவருடியை வைத்து தனது திரைப்படங்களை இயக்கியவர் ரஞ்சித். அதாவது தலித் மக்களுக்கு எதிரான அராஜகங்களை செய்கின்ற ஒரு அரசை விமர்சனம் இல்லாமல் நிபந்தனையில்லாமல் ஆதரிக்கும் ஒரு நபர்தான் ரஜனிகாந்த்.

ஏழு தமிழர்கள் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினிகாந்த் வழங்கிய யார் அந்த ஏழுபேர் என்ற பதில் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். தமிழக மக்களின் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை குறித்து அவருக்கு என்ன அறிவும் நிலைப்பாடும் உண்டு என்பதும் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். தமிழகத்தில் நடக்கும் தலித் படுகொலைகள் மற்றும் அங்கு நடக்கக் கூடிய சமூக ஒடுக்குமுறைகள் குறித்து ரஜினி எப்படியான குரலை வழங்கியுள்ளார் என்பதும் தமிழக மக்கள் தெரியும்.

ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் உரிமைகளுக்காக ஒருபொழுதும் குரல் கொடுக்காதவர் ரஜினி. அத்துடள் இன்றைய தமிழக மக்களின் உடைய பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் ரஜனிகாந்த் ஒருபோதும் குரல் கொடுத்ததில்லை. தன்னுடைய பணம் புகழ் அதிகாரம் போன்றவற்றை தக்கவைக்கவே இந்தியாவை ஆளும் அரசாங்கங்களின் கால்களை நக்கி வாழும் நடிகர் அவர்.

இந்த நிலையில் அந்த ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் எடுத்தவர் இயக்குனர் ரஞ்சித். ஏற்கனவே ஒரு முறை நிகழ்வு ஒன்றில் பேசிய ரஞ்சித் தமிழ்தேசிய மீது தன்னுடைய வெறுப்பை வெளிப்படுத்தியிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அத்துடன் தமிழ் தேசியத்தை சிதைக்கின்ற ஆளும் இந்திய அரசாங்கத்தின் அடிவருடியாக பா ரஞ்சித் தமிழகத்தில் களம் இறக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இயக்குனர் பா ரஞ்சித் இலங்கை அரசின் ஆதரவு எழுத்தாளர்கள், நடிகர்கள் அரசியல்வாதிகளுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர்கள் இணைந்து இந்திய இலங்கை அரசுக்கு ஆதரவான பல்வேறு வேலைகளைச் செய்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் தற்போது நிகழ்வு ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் ரஞ்சித் ராஜராஜசோழன் ஒரு அயோக்கியன் என்றும் அவருடைய காலத்திலேயே தலித்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றும் தமிழின வரலாற்றுக்கு எதிராக ஒரு பொய்யை அவதூறை பொறுப்பை கொட்டித் தீர்த்துள்ளார்.

அது மாத்திரமன்றி தமிழீழ விடுதலை புலிகள் மீது விமர்சனம் உண்டு என்று கூறி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அவதூறு ஏற்படுத்த முயன்றுள்ளார். புலிகள் பற்றி இப்போது இவரை யார் கருத்து கேட்டது? புலிகள் பற்றி பேச இவர் யார்? ஒடுக்குமுறைகளையும் வேற்றுமைகளையும் களைந்து சமத்துவமான சமூகத்தை உருவாக்கி காட்டிய புலிகள் பற்றி, ரஜினியை வைத்து படமெடுத்த இவருக்கு பேச என்ன அருகதை இருக்கிறது?

அவற்றை வைத்துப் பார்க்கின்ற பொழுது நடிகர் ரஜினிகாந்த் மாத்திரமல்ல இயக்குனர் ரஞ்சித் ஆளும் இந்திய இலங்கை அரசின் கைக்கூலிகள் என்பது தெளிவாகின்றது. ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் உரிமைக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். எமது மக்களைப் பொறுத்தவரை அவர்கள் உன்னதமான புனிதர்கள். அவர்கள் மீது எந்த விமர்சனமும் எங்கள் மக்களுக்கு இல்லை. எனவே விடுதலைப் புலிகள் மீது விமர்சனத்தை வெளிப்படுத்த கூடியவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாகவே இருப்பார்கள். அதாவது சிங்கள அரசின் கைகக்கூலிகளாக இருப்பார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் மாத்திரமன்றி இயக்குனர் ரஞ்சித் இயக்கக்கூடிய திரைப்படங்களையும் ஈழத்தமிழ் மக்கள் இனி புறக்கணிக்கவேண்டும். ஏற்கனவே காலா திரைப்படம் தோல்வியைத் தழுவியது ரஜினிகாந்துக்கும் ரஞ்சித்துக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இவர்கள் உருவாக்கக்கூடிய திரைப்படங்களை தமிழகத் தமிழர்கள் மாத்திரமின்றி ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் புறக்கணித்து ரஞ்சித்திற்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும். இனி காலா போன்றே எல்லாம் கவிழும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 09.06.2019

Leave A Reply

Your email address will not be published.