விடுதலைப்புலிகளின் சரணடைவு விடயத்தில் இந்தியாவின் தலையீடு – அனந்தி வாக்குமூலம்!

0

பெயர் பட்டியலும் வெளியிட்டார்!

இந்திய அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது முதலமைச்சர் கருணாநிதி சார்பில் கனிமொழி பேசியிருக்கிறார் என நம்பியே நாம் எமது உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்தோம் என தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியும்,முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தம் நடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகள் தமிழ் நாட்டு அரசுடன் பேசியது எல்லோருக்கும் தெரியும் என தெரிவித்த அனந்தி சசிதரன்

ஜெகத்கஸ்பர் , கார்த்தி சிதம்பரம் (சிதம்பரத்தின் மகன்), கனிமொழி(கருணாநிதி மகள்) ஆகிய மூவருமே தமிழ் நாட்டு அரசு சார்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர் என தெரிவித்தார்.

ஜெகத் கஸ்பர் இறைபணியில் ஈடுபடுகின்றவர் அவர் இன்றும் மவுனம் காக்கின்றார். எங்களுடைய அழிவு தொடர்பாக அவர் தெளிவாக பேசினாலும் கூட இறுதி யுத்தத்தில் தன்னுடைய வகிபாகம் என்ன என்பதை கூட கூறமுடியாதவராகவே இருக்கின்றார் என தெரிவித்த அனந்தி சசிதரன்

விடுதலைப்புலிகளை ஒரு மாயையான வலையில் சிக்கவைத்து அவர்களை மரணிக்க விடாமல் சரணடையச் செய்து ஒரு நம்பிக்கையான வாக்குறுதி வழங்கி இன்று அவர்களுக்கு என்ன நடந்தது என்று கூட பேசமுடியாதவர்களாக தமிழ் நாட்டு அரசியல் போய்கொண்டிருக்கின்றது என தெரிவித்தார்.

கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது கூட இறுதி யுத்தத்தில் மிக மோசமான ஷெல் வீச்சு இடம்பெற்ற நேரம்.இடுப்பளவு வெள்ளத்திற்குள் மக்கள் பங்கருக்குள் இருக்க, வெள்ளத்தில் நின்றே விடுதலை புலிகள் சண்டையிட்டார்கள் என தெரிவித்த அனந்தி சசிதரன்

கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கின்றார் நம்மை காத்து விடுவார்கள் என மக்கள் நினைத்திருந்தார்கள். என தெரிவித்தார்.

யுத்தம் நின்று விட்டது என கூறினீர்கள் ஆனால் சண்டை இடம்பெறுகிறது என கருணாதியிடம் கேட்டிருந்தார்கள் அதற்கு அவர் கூறிய பதில் மழை நின்றாலும் தூறல் நின்றுவிடாது என்று கூறியிருந்தார் என தெரிவித்த அனந்தி சசிதரன்

உண்மையில் கருணாநிதி ஒரு இரக்கமற்ற சிந்தனையாளர்.நாம் அவர் சாவுக்கு ஒருதுளி கண்ணீரும் சிந்தவில்லை என தெரிவித்தார்.

குழந்தைகள்,பிஞ்சுகள் கொல்லப்பட்டதையும் தாய் கர்ப்பத்தில் இருந்து வெளிவராமல் வயிற்றிலே இறந்த கொடூரங்களை பார்த்தவர்கள் என்ற வகையில் கருணாநிதியின் கலைநயமான கருத்தை நாங்கள் வெறுப்போடு பார்த்தோம் என தெரிவித்த அனந்தி சசிதரன்

விடுதலைபுலிகளை காப்பாற்றியிருந்தால் இன்றும் திமுக அட்சியில் இருந்திருக்கும். சாகும் வரையில் கூட கருணாநிதியினால் ஆட்சியினை பிடிக்க முடியவில்லை.அவரை நம்பிய மக்களுக்கு செய்த துரோகமே அதற்கு காரணம் என்றார்.

விடுதலை புலிகள் அன்று சரணடையாமல் சயனைட்டை கடித்து இறந்திருந்தால் கூட போராட்டத்திற்காக இறந்துவிட்டனர் என எண்ணி மதம் சார் கடமைககளை செய்திருப்போம் என தெரிவித்த அனந்தி சசிதரன்.

இந்திய அரசாங்கம் தலையிட்டிருகின்றது முதலமைச்சர் கருணாநிதி சார்பில் கனிமொழி பேசியிருக்கிறார் என நம்பி நாம் எமது உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்திருந்தோம். ஆனால் அவர்கள் தமது அரசியல் சுய இலபாத்திற்காக நயவஞ்சகமாக எமது உறவுகளை அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு இன்று வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கின்றார்கள் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.