ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ரணில் கடும் கண்டனம்!

0

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கடந்த வெள்ளிக்கிழமை தனது உரையில் கூறியுள்ள கருத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பு அலரிமாளிகையில் நேற்று (11) நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இதனைக் கூறியுள்ளார்.

அவர் அவ்வாறான அறிவிப்பு குறித்து இதுவரையில் எந்தவித மறுப்பையும் வெளியிடாதுள்ளதாகவும் பிரதமர் விசனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையர் ஒருவராயின், நாட்டில் தற்பொழுது நிலவும் நிலைமையை விளங்கிக் கொண்டு பெரும்பான்மை யார்? சிறுபான்மை யார்? என்பதை விளங்கி, சகலருடனும் இணைந்து உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவே முன்வரவேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்தாலும், சர்வதேச ரீதியில் பெரும்பான்மையினர் எனவும், இதனால், யாருடையவும் அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்கள் கீழ்படிய மாட்டார்கள் எனவும் கிழக்கு ஆளுநர் கடந்த வெள்ளிக்கிழமை தனதுரையில் கூறியிருந்தார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.