203 ஓட்டத்துக்குள் சரணடைந்த இலங்கை!

0

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 203 ஓட்டத்துக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 35 ஆவது ஆட்டத்தில் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெற்று வருகிறது.

இன்று மாலை 3.00 மணிக்கு செஸ்டர் லீ ஸ்டிரிட்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியானது களத்தடுப்பை தேர்வுசெய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணியின் முதல் விக்கெட் முதல் பந்துக்கே பறிபோனது. இதன் பின்னர் களமறிங்கிய ஏனைய வீரர்களும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணி இறுதியாக 49.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன டக்கவுட்டுடனும், குசல் பெரேரா 30 (34) ஓட்டத்துடனும், அவிஷ்க பெர்னாண்டோ 30 (29) ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 23 (51) ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 11 (29) ஓட்டத்துடனும், தனஞ்சய டிசில்வா 24 (41) ஓட்டத்துடனும், ஜீவன் மெண்டீஸ் 18 (46) ஓட்டத்துடனும், திஸர பெரேரா 21 (25) ஓட்டத்துடனும், இசுறு உதான 17 (32) ஓட்டத்துடனும், மலிங்க 4 (2) ஓட்டத்துடனும் ஆட்டமிந்ததுடன் சுரங்க லக்மால் 5 (7) ஓட்டத்துடன் ஆட்டமிக்காதிருந்தார்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பிரிட்டோரியஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ரபடா 2 விக்கெட்டுக்களையும், பெஹ்லுக்வேயோ மற்றும் டுமினி தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.  

Leave A Reply

Your email address will not be published.