அனுஷ்காவிற்கு பதில் இவரா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

0

அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அனுஷ்காவின் நடிப்பை பலரும் பாராட்டினர். அதன் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் பட வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்தன. பாகுபலி, பாகமதி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அருந்ததி படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. இவர் ஆர்.எக்ஸ் 100 படத்தில் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஏஞ்சல் படத்தில் நடிக்கிறார். 

அனுஷ்கா நடித்த கதாப்பாத்திரத்தில் பாயலை நடிக்க வைப்பதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அனுஷ்காவிற்கு பதில் வேறு யாரும் அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்த மாட்டார்கள் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுஷ்காவை நடிக்க வைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.