அவுஸ்திரேலியாவில் சிக்கிய 140 மில்லியன் டாலர் பெறுமதியான போதைப்பொருள்!

0

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஈஸ்ட்வுட் நகருக்கு அருகே அந்த வேனை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த வேனை சோதனையிட்டபோது, அதில் பொட்டலம் பொட்டலமாக போதைப்பொருள் கடத்தி சென்றதை கண்டு அதிர்ந்துபோயினர்.

இதையடுத்து, 273 கிலோ எடையிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு 140 மில்லியன் அமெரிக்க டாலர் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், வேனை ஓட்டி வந்த 28 வயதான வாலிபரை போலீசார் கைது செய்து, கடத்தல் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.