இலங்கை கிரிக்கெட் துறையில் முக்கியமான அதிரடி மாற்றங்கள்!

0

இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு மாற்றங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக  விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரின் பின்னர் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர்களை அவர்களது பதவியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவிக்கவுள்ளேன்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன் பின்னர் அவர்களின் ஒப்பந்தம் தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறும் அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் எதிர்கொண்ட தோல்வி, இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave A Reply

Your email address will not be published.