உயரமான மாணவி! உலக சாதனை படைக்கும் தர்ஜினி சிவலிங்கம்! அவரது ஆசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு

0

தர்சினி சிவலிங்கத்திற்கு கற்பித்த பேராசிரியர் பாலசிங்கம் சுகுமார் எழுதிய பதிவு.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவி இன்று வலைப் பந்தாட்டத்தில் உலக அளவில் சாதனை படைத்து வரும் வலைப் பந்தாட்ட வீராங்கனை.

2003ஆம் ஆண்டு நான் கிழக்குப் பல்கலைக் கழக பீடாதிபதியாக கடமையாற்றிய காலம் ஒரு நாள் புதிய மாணவர்களின் வருகை என் அலுவலகத்தில் இருக்கிறேன் அலுவலக முன் சிறிய மதிலுக்கு மேல் ஒரு மாணவி எல்லோரையும் விட உயரமாக தென்படுகிறார்.நான் நினைத்தேன் ஏதோ ஒரு உயரத்தின் மேல் ஏறி நிற்பதாக.வெளியே வந்து பார்த்த போது அவரது அசாதாரணமான உயரம் பின்னாளில் அவரை ஒரு சிறந்த வலைப் பந்தாட்ட வீராங்கனையாக காண முடிந்தது.

படிக்கும் காலத்தில் மிகுந்த கீழ் படிவு உள்ள மாணவியாய் அவரை தரிசிக்க முடிந்தது.மாணவர்களின் அக்கறையில் தனிப்பட்ட சிரத்தையெடுத்து ஊக்குவிக்கும் சிறந்த மனம் கொண்ட அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் தர்ஜினிக்கு பல வழிகளில் உதவிக் கரமாய் இருந்து ஊக்கப் படுத்தினார்.இன்று அவர் இருந்திருந்தால் எவ்வளவோ சந்தோசப் பட்டிருப்பார்.தர்ஜினி சாதிக்கப் பிறந்தவர் என்பதை அடையாளம் கண்டவர் பேராசிரியர் ரவீந்திரநாத்.

தற்பொழுது லண்டனில் நடை பெற்று வரும் உலக கோப்பைக்கான வலைப் பந்தாட்ட போட்டியில் பங்கு கொண்டு

இன்று உலக சாதனைகள் பலவற்றை முறியடித்து நம் ஈழ மண்ணுக்கு பெருமை சேர்க்கும் தர்ஜினிக்கு வாழ்த்துகள்.

Balasingam Sugumar

Leave A Reply

Your email address will not be published.