கெட்டுப்போன ரொட்டியால் தஜிகிஸ்தான் சிறையில் கைதிகள் பரிதாப மரணம்!

0

தஜிகிஸ்தான் நாட்டில் குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளில் இருந்து வேறு சிறைகளுக்கு 128 கைதிகளை மாற்றும் பணி நடந்தது. அதற்காக சிறையை விட்டு வெளியே வந்த கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள் வழங்கப்பட்டன. அவற்றை சாப்பிட்ட அரை மணி நேரத்துக்குள் 16 பேருக்கும் மயக்கம், குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்பட்டன.

வேறு சிறைக்குள் வாகனம் நுழைந்தவுடன், 16 கைதிகளுக்கும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. ஆயினும், 14 கைதிகள் உயிரிழந்தனர். 2 பேர் மட்டும் பிழைத்துக் கொண்டனர்.

கைதிகள் சாப்பிட்ட ரொட்டி, கெட்டுப்போய் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.