கோத்தபாயவுக்கு தூக்குக் கயிறு தயாராகிறது!

0

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாசமிகு சகோதரர் கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியானால் என்ன விளைவுகள் நடக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய ஒரு தேவை தமிழ் சமூகத்திற்கு உள்ளது.  ராஜபக்சவின் உடைய வலதுகரமான கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஆவார்.

இவர் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த முக்கியமான சூத்திரதாரி. 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில ஈழத்தமிழ் மக்கள் துடிதுடிக்க கொன்று அழிக்கப்பட்டார்கள். சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள். அது மாத்திரமன்றி இறுதி யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகளை மேற்கொண்டமை சிறுவர்களை  கொலை செய்தமை போன்ற போர் நியதிகளுக்கு மாறான – மானுட விரோத செயற்பாடுகளில் கோத்தபாய ராஜபக்ச ஈடுபட்டார். 

பல ஆயிரக்கணக்கான போராளிகள் குழந்தை குட்டிகளுடன் தனது மனைவியுடன் குடும்பம் குடும்பமாக சரணடைந்த நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாத ஒரு சூழல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவைகளின் சூத்திரதாரியாக கோத்தபாய ராஜபக்சவே காணப்படுகின்றார்.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றனர். அத்துடன் ராஜபக்ச யுகம் முடிந்து விட்டதாக கருதப்பட்டது. அரசியலில் இருந்து விலகிவிட்டதைப் போன்று மஹிந்த ராஜபக்ச பாவனை செய்தார். தனது சொந்த ஊருக்கும் திரும்பியிருந்தார்.

ஆனாலும் சில நாட்களில் மீண்டும் கொழும்பு அரசியலில் ராஜபக்ச பங்கெடுத்தார். அரசியல் பேசத் தொடங்கினார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகினார். இந்த நிலையில் மீண்டும் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக் கொண்ட முயற்சிகளிலும் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்தார். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச தரப்பினரின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கின்ற சர்ச்சைகள் இலங்கையின் அரசியலில் நிலவி வந்தது.

gotapaya war crime க்கான பட முடிவு

இந்த நிலையில் இன்றைய தினம் மஹிந்த ராஜபக்சவின் தரப்பில் கோத்தபாய ராஜபக்ஷவை  ஜனாதிபதி வேட்பாளராக இறக்கப்படுவார் என்றும் மஹிந்த ராஜபக்ச அடுத்த பிரதமராக பதவியேற்பார் என்றும் உறுதியான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்றால் இலங்கை ஒரு சுடுகாடாக மாறும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மீண்டும் வெள்ளை வான்கள் புறப்படும். ஊடகவியலாளர்கள் காணாமல் போவார்கள். எழுத்தாளர்கள் கொல்லப்படுவார்கள். அப்பாவி பொதுமக்கள் வெள்ளை வான்களில் கடத்தி அழிக்கப்படுவார்கள்.

சிங்கள மக்கள் கூட இதில் பாதிக்க படுவார்கள். முக்கியமாக ஈழத்தமிழ் மக்கள் பலர் இன அழிப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதில் மாற்றமில்லை. கோத்தபாய ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமக்கு எதிராக வாக்களித்தமைக்காக ஈழத்தமிழர்கள் மீது கடுமையான ஆத்திரத்திலும் கோபத்திலும் உள்ளார்கள்.

gota war crime க்கான பட முடிவு

ஏற்கனவே அவர்களுடைய கோபத்தின் பழிவாங்கலாக வெளிப்பாடாக முள்ளிவாய்க்கால் நிகழ்ந்திருந்தது. முள்ளிவாய்க்கால் காரணமாக ஈழத்தமிழர்களுக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கும் ஒரு கணக்கிருக்கிறது. இவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தால் இவர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக தண்டிக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்து முக்கியமான அதிகார பதவிகளை கைப்பற்றுவதன் வாயிலாக அவர்கள் தமக்கான தூக்குக்கயிறு களையும் மின்சார கதிரைகளையும் தயார் செய்கிறார்கள் என்பதே உண்மை ஆகும். 

தொடர்புடைய படம்

எத்தனை ஆண்டுகள்  சென்றாலும் முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தமைக்கு மஹிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்ஷ பதில் கூறியே ஆக வேண்டும். அதனை ஈழத்தமிழர்கள் மாத்திரமல்ல சிங்கள மக்களும் கேட்கின்ற ஒரு காலம் உருவாகும். அத்தகைய ஒரு காலத்தின் தொடக்கமாகும் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு நிகழ்வு நடந்தேறி இருக்கிறது என்றே கூற வேண்டும்.

உலக மகா பாதகங்களையும் மானுடர்களுக்கு எதிரான மாபெரும் அநீதிகளையும் செய்கின்றவர்கள் ஒருபொழுதும் நீதியின் பார்வையில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது. கோத்தபாயவும் மஹிந்த ராஜபக்சவும் இதற்கு விதிவிலக்கல்ல இவர்கள். கோத்தபாய ராஜபக்ச, அதிகாரக் கதிரையை தடவிக் கொண்டிருக்கிறார். சர்வதேசம் கோத்தபாயவுக்கு தூக்குக் கயிற்றை பின்னி, மின்சாரக் கதிரையை தூசு தட்டிக் கொண்டிருக்கிறது. 

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
28.07.2019

Leave A Reply

Your email address will not be published.