சம்பந்தன் விகாரையா? சுமந்திரன் விகாரையா?

0

ஈழத்திலே நேற்றைய தினம் ஒரு மிகப்பெரிய ஆக்கிரமிப்பு சின்னமான விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சம்புத்தி விகாரை என பெயரிடப்பட்ட இந்த விகாரை திறந்து வைக்கின்ற நிகழ்வுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக ஆதரவினை வழங்கி இருக்கின்றது. இவ்வாறான ஒரு விகாரையை அமைப்பதை தடுத்து நிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறியுள்ளமை வரலாற்றுத் தவறாகும். 

தமிழர் தாயகத்தில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிங்கள அரசும் சிங்கள அரசும் படைகளும் இன அழிப்பை நோக்கமாகக் கொண்டு பல்வேறு புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் நிறுவி வருகின்றது. தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இதன் மூலம் இலக்கு வைக்கப் பட்டுள்ளன. வன்னிய பொறுத்தவரையில் பௌத்த மதத்துடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாத பல பிரதேசங்கள் பல நகரங்களில் பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாங்குளம் மற்றும் மன்னார் என முதன்மையான நகரங்கள் பௌத்த மயமாக்கப்பட்டுள்ளன.

ஒரு புறத்தில் ராணுவ மயம். மற்றொரு புறத்தில் புத்த மயம். இந்த இரண்டு விடயங்களும் தமிழின அழிப்பை நோக்கமாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் உடைய காலத்தில் இலங்கை இராணுவத்தினர் புத்தர் சிலைகளை வைக்கின்ற விகாரைகளை கட்டியெழுப்புகின்ற நாசகார வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். இராணுவ ஆக்கிரமிப்புக்கு இணையாக ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை மத அடையாளங்களை இல்லாமல் செய்து அவர்களை இன அழிப்புக்கு உள்ளாக்கும் நோக்கிலேயே இவை திணிக்கப்பட்டது.

இதனை பண்பாட்டு அழிப்பு என்றும் இன அழிப்பு என்றும் கூறலாம். அந்த அடிப்படையில் இராணுவ முகாங்கள் மற்றும் புத்தர் சிலைகளும் ஏ 9 நெடுஞ்சாலையில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லக்கூடிய பாதையில் தாராளமாக அமைக்கப்பட்டிருப்பதை பயணிப்பவர்கள் கண்கூடாக காணமுடியும்.

அண்மைய நாட்களில் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பூர்வீகமாக காணப்பட்டு வந்த பிள்ளையார் ஆலயத்தை நிர்மாணித்து அங்கே வழிபாடுகளை மேற்கொள்ள தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. பிள்ளையார் ஆலய வளாகத்தை பௌத்த விகாரையை அமைத்து ஆக்கிரமித்துள்ள பிக்குவே இதனை செய்கின்றார். 

இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது அந்த வழக்கு வவுனியா நீதிமன்றத்துக்கு குறித்த வழக்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த சூழ்நிலையில் வவுனியா நீதிமன்றம் பிள்ளையார் ஆலயத்தில் எந்தவிதமான புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க கூடாது என்று கட்டளை வழங்கியுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசின் – சிங்கள நீதிமன்றங்கள் தமிழர்களுக்கு எதிராகவும் இராணுவம் மற்றும் சிங்களவர் எனக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கும் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறான ஒரு விடயமே முல்லைத்தீவு செம்மலை நீராவியடியில் நடைபெற்றிருக்கின்றது.

அத்துடன் திருகோணமலை கன்னியா வெந்நீர் குத்து பகுதியிலே காணப்படக்கூடிய பூர்வீகமான பிள்ளையார் ஆலயத்தின் அழித்து அதனுடைய தடயங்களை அழித்து அங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் தொல்லியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

இதற்கு எதிராக அங்கே அந்த காணியின் உரிமையாளரான தாயார் நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருக்கிறார். அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அங்கே இருக்கக்கூடிய தமிழ் மக்கள் உள்ளம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் அந்த பகுதியில் பௌத்த விகாரையை எதிர்த்த போதும் கூட அந்த முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையும்  அமைச்சர் மனோ கணேசன் போன்றவர்களும் இந்த விடயத்தில் தலையிட்டு இருந்தார்கள். இருந்தாலும் தொடர்ந்து பௌத்த தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த சூழ்நிலைகளில் யாழ்ப்பாணம் நவாலியில் பாரிய புத்த விகாரை ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. அதுவும் நல்லிணக்க விகாரை என்ற பெயரில் திறக்கப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய அநியாயமாக காணப்படுகிறது? ஆக்கிரமிப்பு இன அழிப்பு பண்பாட்டு அழிப்பு என்பது நல்லிணக்கத்தின் பேரால் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த 2011ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்களவர் குடியேற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு பாடசாலைகள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. காணிகள் வழங்கப்பட்டன. தற்போது அவர்களுக்கு பாரிய பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களினுடைய தாயகத்தில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் பௌத்த விகாரைகள் புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு தான் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.  ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ரணில் அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்திலேயே நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு எதிராக – அரசாங்கத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கிறது. ஆதரவு அளிக்கின்றது. அதே நேரம்  தமிழர்களினுடைய தாயகத்திலே பாரிய பௌத்த விகாரைகளை கட்டுகிறது இலங்கை அரசு. புத்தர் சிலைகளை வைக்கின்றது. அரசுக்கும் அரசின் ஆக்கிரமிப்புக்கும் உமது தலைமை ஆதரவு அளிப்பது அதிர்ச்சி தருகின்றது. 

உண்மையில் இங்கே வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளுக்கும் விகாரைகளுக்கும் சுமந்திரன் விகாரைகள் சம்பந்தன் விகாரைகள் என்று பெயர் சூட்டுங்கள். எங்களுடைய தலைவர்களின் இணக்கத்தோடு மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்புகளும் முன்னெடுக்கப்படுவது பெரும் வேதனையையும் பெரும் அதிர்ச்சியையும் தருகிறது. இத்தகைய அநீதகிள்னபோது, சிங்கள அரசோக்கு தமிழ் தலமை உடந்தையாக இருப்பது,  இந்த மண்ணுக்கும் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கும் மாவீரர்களுக்கும் செய்கின்ற மாபெரும் துரோகம் ஆகும். 

வரலாற்றில் எதிரிகளை மன்னிக்கலாம் துரோகிகளை மன்னிக்க முடியாது. வரலாற்றில் எதிரிகளின் கொடுமைகளை மறக்கலாம். துரோகிகளின் ஈனச்செயல்களை மறக்க முடியாது. ஈழம் துரோகிகளினால்தான் வீழ்ந்து வந்திருக்கின்றது. இந்த நவீன துரோகிகளை என்ன செய்வது? 

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
14.07.2019.

Leave A Reply

Your email address will not be published.