சோமாலியாவில் பொது இடத்தில் 10 பேர் தூக்கிலிட்டு கொலை!

0

சோமாலியா நாட்டைச் சேர்ந்த ‘அல் ஷாபாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது இடத்தில் தூக்கிலிட்டு கொலை செய்ததாக பிரான்ஸ் நாட்டு வானொலி தெரிவித்துள்ளது.

இவர்கள் 10 பேரும் வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக பயங்கரவாதிகள் சந்தேகப்பட்டு குற்றம் சாட்டினர். 5 பேர், கென்யா, சோமாலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 4-ந் தேதி கொல்லப்பட்டனர். மற்ற 5 பேரும் மறுநாள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் வானொலி தெரிவித்தது.

சோமாலியாவின் தென்பகுதியில், மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பொது இடத்தில் இந்த கொலைகள் நடந்ததாக கூறியது.

Leave A Reply

Your email address will not be published.