தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏன் குண்டு வெடிக்கவில்லை? தயாசிறி எம்.பி கிளம்பியுள்ள சர்ச்சை!

0

ஈஸ்டர் தாக்குதல் அன்று முக்கிய ஹோட்டல்களில் குண்டு வெடித்த போதும் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாத்திரம் ஏன் குண்டு வெடிக்கவில்லை.

அப்படியென்றால் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இருந்தவர்கள் யார் ? இது பாரிய சந்தேகமாக உள்ளது என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர எம்.பி தெரிவித்தார்.

சஹ்ரானை யாரோ சிலர் இயக்கியுள்ளனர். இவர்கள் ஐ.எஸ் சார்ந்தவர்கள் அல்ல எனவும் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் இருந்துள்ளது என்ற சந்தேகம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரவழைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.