துருதுருவ்வை பார்த்து மிரண்டு விட்டேன்: விக்ரம் ஓபன் டாக்

0

விக்ரம் மகன் துருவ் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பை படக்குழுவினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது மகன் நடிப்பு குறித்து பேசியுள்ள விக்ரம், ‘ஆதித்ய வர்மா டீஸர் இந்த அளவிற்கு வரவேற்பு பெறும் என நானே எதிர்பார்க்கவில்லை. துருவ் படித்து முடித்ததும், படம் இயக்குவான் என தான் நினைத்தேன். ஆனால் அவன் நடிகனாக தான் ஆசைப்பட்டான். ஆதித்ய வர்மா படப்பிடிப்பில் பார்த்த போது தான், அவனுக்குள் இயற்கையாகவே ஒரு நடிகன் இருப்பதை பார்த்தேன். அவன் அழுது நடிக்கிற காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன். காட்சி முடிந்த பிறகும் அவனை அதிலிருந்து வெளியே கொண்டு வருவது இயக்குநருக்கு சவாலாக இருந்தது.

இது அவனது சினிமா படிப்பால் வந்ததா அல்லது என் மூலமாக கொஞ்சம் வந்ததா என்பது எனக்கு தெரியவில்லை. கடாரம் கொண்டான் டப்பிங் பணியின் போது சில காட்சிகளை பார்த்து திருத்தங்கள் சொன்னான். அவை ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது. நடிப்பின் மீதான அவனது ஆர்வம் வியப்பைத் தருகிறது’ என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.