புலிகள் தம்மிடம் சரணடையவில்லை: இராணுவம் சொல்வது பச்சைப் பொய்! இதோ ஆதாரங்கள்

0

”முழுப் பூசணிக்காயை  ஒரே அமுக்காகச் சோற்றில் மறைக்கப் பார்த்த  முட்டாள்  போல்”  போரின் இறுதிக் கட்டத்தில்  தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்ச் செய்தித்தாள் ஒன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள பதிலிலேயே  ”தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை” என இலங்கை இராணுவ   தகவல் அதிகாரியான பிரிகேடியர் ஏஎம்எஸ்பீ அத்தபத்து என்பவரினால் குறித்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய தமிழ்ச் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. இறுதி யுத்தக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடையவில்லை, அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமே சரணடைந்துள்ளனர் எனக் குறித்த பதில் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகள் சரணடைந்த க்கான பட முடிவு

மேலும் சரணடைந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அதிகாரங்கொண்ட நிறுவனமான புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தில்  இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் வன்னியில் நிலைகொண்டிருந்த ஐ.நா. சபைப் பிரதிநிதிகள்,  செஞ்சிலுவை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்று உத்தரவை அன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய இராசபக்சா பிறப்பித்திருந்தார். தனது உத்தரவை மீறி யாராவது வன்னியில் தொடர்ந்து இருந்தால் அவர்களது பாதுகாப்புக்கு  இலங்கை அரசாங்கம் பொறுப்பல்ல என கோத்தபாய  சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்தி இருந்தார்.

தமிழ்மக்கள்  தங்களை அந்தரத்தில் விட்டு விட்டு  போக வேண்டாம் என்று அழுது குளறி கெஞ்சிக் கேட்டும்   ஐ.நா. பிரதிநிதிகள்  ஓட்டமும் நடையுமாக கொழும்பு போய்ச் சேர்ந்தார்கள். அவர்களைப் போலவே ஊடகவியலாளர்களும் செஞ்சிலுமைச் சங்க அதிகாரிகளும்  வன்னியைவிட்டு ஓடிப்போனார்கள்.

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka

சாட்சியங்கள் இல்லாத போரை நடத்துவதற்கு வசதியாகவே கோத்தபாய இந்த உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார் என்பது வெள்ளிடைமலை.  மகிந்த இராசபச்சா பாதுகாப்பு அமைச்சராக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாயவே போர்  தொடர்பான முடிவுகளை எடுத்தார்.

போரின் இறுதிக் கட்டத்தில்  இன்றைய சனாதிபதி சிறிசேனா பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.  பதில் பாதுகாப்பு அமைச்சராக 14 மே 2009 அன்று நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற  24 மணித்தியாலத்தில்  1,700 தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டு 3,000 பேர் காயமடைந்தார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் அடுத்த சில நாட்களில் கொல்லப்பட்டார்கள்.

“போரின் இறுதி 2 வாரங்கள் நான்தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அந்த இறுதி 2 வாரங்களில்தான் அதிகளவில்  வி.புலித் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இராணுவ தளபதியாக பொன்சேகா இருந்தார். அதற்கு முன்னர் போர்க் காலத்தில்  5 தடவைகள் நான்தான் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன்” என வீராப்புப் பேசுகிறார்  சனாதிபதி சிறிசேனா.

“I was the Minister in Charge of Defence during the last two weeks of the war in which most of the leaders of the LTTE were killed with General Fonseka at the helm of the Army.”

“Prior to that I have acted as the Minister of Defence five times during the height of the war.” 

மே 18 அன்று சிறிலங்கா அரச  தொலைக்காட்சிகள்  கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களது செத்த சடலங்களை ஒளிபரப்பின. அந்தச் சடலங்கள்  சரணடைந்த பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட புலிகளது சடலங்கள்.  (https://www.tamilguardian.com/content/i-was-defence-minister-when-ltte-leaders-were-killed-says-maithri)

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka

இலங்கை இராணுவம் சொல்வதுபோல்  வி.புலிகள்  தங்களிடம் சரணடையவில்லை அரசாங்கத்திடம் சரணடைந்தார்கள் என்பது உண்மையானால்  சரண் அடைந்த நூற்றுக் கணக்கான வி.புலிகளைச் சுட்டுக்கொன்றது யார்? நிச்சயமாக அரசாங்கம்  ஆக இருக்க முடியாது. அதாவது அரசாங்க அதிகாரிகள் போர்முனையில் இருக்கவில்லை. அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அமைச்சுச் செயலாளர்கள் அங்கு முகாமிட்டு இருக்கவில்லை.

18 மே 2009 அன்று காலை முதல் முள்ளிவாய்க்காலில்  சிக்குப்பட்டிருந்த தமிழ்மக்களை சரண் அடையுமாறு இலங்கை இராணுவம் ஒலிபெருக்கி மூலம்   அறிவித்தல் விடுத்த வண்ணம் இருந்தது. பொதுமக்கள் ஒரு பக்கமும் போராளிகள் இன்னொரு பக்கமும் சரணடையுமாறு கேட்க்கப்பட்டனர்.

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka

பாலசிங்கம் நடேசன் (அரசியல் பிரிவுத் தலைவர்) அவரது துணைத் தலைவர் சீவரத்தினம் புலித்தேவன் மற்றும் கேணல் இரமேஷ் (சமாதான அலுவலகம்)  உட்பட 300 போராளிகள் வெள்ளைக் கொடியுடன் இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தார்கள். 14 மே நடேசன் ஐக்கிய நாடுகள் சபை, நோர்வே அரசு, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளோடு தொடர்பு  கொண்டு பேசினார்.

மகிந்த இராசபச்ச மற்றும் பசில் இராசபக்ச ஆகியோர் நடேசனும் மற்றவர்களும்  வெள்ளைக் கொடியுடன் குறிப்பிட்ட இடத்தில் சரணடையலாம் எனத் தெரிவித்தார்கள். இந்தச் சரண் மூன்றாவது தரப்பின் கண்காணிப்பில் இடம்பெற வேண்டும் என்ற  நடேசனின்  வேண்டுகோள் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.  நடேசனும் மற்றவர்களும் இலங்கை இராணுவத்தின்  58 ஆவது பிரிவிடம் சரண் அடைந்தார்கள். இதன் பொறுப்பதிகாரியாக பிரிகேடியர் சர்வேந்திரா சில்வா  (Brigadier Shavendra Silva)  இருந்தார்.

அதே நாள் (மே 18, 2009) மாலை  வட்டுவாகல் பாலத்தில்  எழிலன், யோகி, பாலகுமார், கவிஞர் இரத்தினத்துரை உட்பட 110 க்கும் மேற்பட்ட இரண்டாவது மட்ட வி.புலித் தலைவர்கள் சரண் அடைந்தார்கள். இப்படிச் சரணடைந்தவர்களை   விசாரணை என்று சொல்லி பேருந்துகளில் இராணுவம் அழைத்துச் சென்றது. அப்படி அழைத்துச் சென்றவர்களின் பட்டியலை  பாதிரியார் யோசேப் பிரான்சிஸ் என்பவர் தயாரித்திருந்தார். பின்னர் அவரும் துணைக்கு போராளிகளோடு பேருந்தில் பயணம்  மேற்கொண்டார். பின்னர் அவரும் கொலை செய்யப்பட்டார்.

சரணடைந்த போராளிகளை  இராணுவம் அழைத்துச் சென்றதை பலர் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் கண்கண்ட சாட்சிகள்.  எடுத்துக்காட்டாக  திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலன் அழைத்துச் செல்லப்பட்டதற்கு அவரது மனைவி  அனந்தி  சசிதரன் கண்கண்ட சாட்சியாக இருக்கிறார்.

சரண் அடைந்த அனைவரும்  சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோத்தபாய அனைவரையும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார் எனப் பரவலாக நம்பப்படுகிறது. பின்னர் புழுதியில்  எரி காயங்களோடு கிடந்த  நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் ஆகியோரது சடலங்கள் காணொளி மூலம் வெளிவந்தன.

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka
Image result for LTTE leader's son Balachandran shot dead

மனிதவுரிமைக்கான  யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர் அமைப்பு (UTHR-J ) தனது அறிக்கையில் சரணடைந்த முக்கிய தலைவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டது. அதில் கரிகாலன் (கிழக்கு மாகாண அரசியல் பிரிவின் தலைவர்) லோறன்ஸ் திலகர் ( தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்) தங்கன் (அரசியல் பிரிவின் துணைப் பொறுப்பாளர்) இளம்பரிதி (முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர்) எழிலன் (முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளர்) பாப்பா (முன்னாள் வி.புலிகளின் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்) பூவண்ணன் (வி.புலிகளின் நிருவாக பிரிவின் பொறுப்பாளர்) ஞானம் (பன்னாட்டு அரசியல் அமைப்பின் பொறுப்பாளர்) மற்றும் தமிழினி ( மகளிர் அரசியல் பிரிவின் தலைவி) ஆகியோரது பெயர்கள் அந்தப் பெயர்ப் பட்டியலில் காணப்பட்டன. சரண் அடைந்த அனைவரும்  சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோத்தபாய அனைவரையும் சுட்டுக் கொல்லுமாறு உத்தரவு பிறப்பித்தார் எனப் பரவலாக நம்பப்படுகிறது.

பின்னர் புழுதியில்  எரி காயங்களோடு கிடந்த  நடேசன், புலித்தேவன், கேணல் இரமேஷ் ஆகியோரது சடலங்கள் காணொளி மூலம் வெளிவந்தன. (http://anyflip.com/upzk/udkk/basic)

தேசியத் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரன் மற்றும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாப்பாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரது வாரிசுகளையும் உயிரோடு விடக்  கூடாது என்பதில் அரச தரப்பு, குறிப்பாக கோத்தபாய, குறியாக இருந்தது.

12 யூன் 2009 அன்று ஏசியன் ரிபுயூன் (The Asian Tribune) – அன்றைய இராசபக்ச ஆட்சியின் ஊதுகுழல் – ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.  விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வி.பாலகுமார் உட்பட யோகரத்தினம் யோகி (வி.புலிகளின் முன்னாள் பேச்சாளர் )  பேபி சுப்பிரமணியன் (வி.புலிகளின் கல்வித்துறைப் பொறுப்பாளர்) லோறன்ஸ் திலகர் ( தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பொறுப்பாளர்) இளம்பரிதி (முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர்) கரிகாலன் (கிழக்கு மாகாண அரசியல் பிரிவின் தலைவர்) மற்றும் பெயர் தெரியாத மூவர் பொலீசின் விசாரணை வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள் என ஏசியன் ரிபுயூன் எழுதியிருந்தது.

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka

06 ஓகஸ்ட் 2009 இல் லங்கா காடியன் (Lanka Guardian)  இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியில் எடுத்த ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அதில் பாலகுமார் மற்றும் அவரது மகன் ஒரு மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்தார்கள். அதன் பின்னணியில் சீருடை அணிந்த இராணுவத்தினர் காணப்பட்டார்கள்.

சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் (டியூ குணசேகரா) தெரிந்தோ தெரியாமலோ  வி.பாலகுமார், யோகரத்தினம் யோகி மற்றும் மூத்த   வி.புலித் தலைவர்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொல்லப்பட்டார்கள் எனச் சொன்னார்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடையச் செல்லு முன்னரே வி.புலிகளால் எரிக் சொல்கெயம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகத் தெரிகிறது.  

மே 19, 2015  இல் யஸ்மின் சூக்கா (International Truth & Justice Project – Sri Lanka)  சரணடைந்த பின்னர் காணாமல் போன விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  முக்கிய போராளிகளது பெயர்ப் பட்டியலை  வெளியிட்டிருந்தார்.  அவரால் வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:

1) ஆதவா ( செயற்பாடு தெரியாது)

2) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

3) அம்பி ( செயற்பாடு தெரியாது)

4) அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

5) ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

6) பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

7) பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

8) V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

9) Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

10) பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

11) பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

12) பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

13) பாபு  ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

14) பாபு  இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

15) பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

16) பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

17) பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

18) Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)

19) எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

20) எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

21) வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

22) கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

23) கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

24) இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

25) இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

26) இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

27) இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

28) இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

29) இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

30) இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

31) இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

32) இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

33) இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

34) இசைபிரியா ( ஊடக பிரிவு)

35) ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

36) ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

37) காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

38) கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

39) கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

40) கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

41) கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

42) கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

43) கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

44) குயிலன் ( இராணுவ புலனாய்வு)

45) குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

46) குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

47) குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

48) லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

49) மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

50) மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

51) மலரவன் (நிர்வாக சேவை )

52) மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

53) மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

54) மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

55) மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

56) மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

57) முகிலன் (இராணுவ புலனாய்வு)

58) முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

59) நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

60) நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

61) நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

62) நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

63) நேயன் (புலனாய்வு)

64) நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

65) நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய் )

66) நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

67) நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

68) பஞ்சன் புலனாய்வு (மகாதேவன் ஞானகரன்) (முக்கியஸ்தர்களில் ஒருவர் )

69) பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

70) Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

71) Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

72) பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

73) பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

74) பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

75) புலித்தேவன் (சமாதான செயலகம்)

76) புலிமைந்தன் (யோகியின் சாரதி)

77) புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

78) புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

79) ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

80) ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

81) ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

82) புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

83) Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

84) Col.ரமேஸ்(மூத்த  இராணுவ தளபதி)

85) ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

86) ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

87) ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

88) S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

89) சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)

90) சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

91) செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

92) சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

93) சின்னவன் (புலனாய்வு)

94) சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

95) Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

96) Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

97) திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

98) திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

99) துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

100) வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

101) வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

102) Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

103) Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

104) வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)

105) வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)

106) வினிதா (நடேசனின் மனைவி )

107) வீமன் (கட்டளை தளபதி)

108) விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)

Image result for List of LTTE cadres who surrendered to the army Yasmin Sooka

109) யோகன் / சேமணன் (அரசியல் துறை)

110) யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)   (https://www.colombotelegraph.com/index.php/disappearances-in-custody-six-years-ago-today/)

ஆக சரணடைந்த வி.புலிப் போராளிகள் இலங்கை இராணுவத்தால்  சித்திரவதை செய்யப்பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்டார்கள். அதற்கான கண்கண்ட சாட்சியங்கள், சூழ்நிலை ஆதாரங்கள், காணொளி, ஒளிப்பட ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆனால் இலங்கை இராணுவமோ தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் தங்களிடம் சரணடையவில்லை எனப்   பச்சைப் பொய் சொல்கிறது. சரணடைந்த வி.புலிகளை படுகொலை செய்த இலங்கை இராணுவ தளபதிகள் போர்க் குற்றவாளிகள். அவர்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி  விசாரணை செய்ய வேண்டும்!

  • நக்கீரன்-

Leave A Reply

Your email address will not be published.