மீண்டும் கன்னியாவில் பௌத்தர்கள் அடாவடி – பிள்ளையார் ஆலய அத்திவாரம் உடைக்கபடுகிறது!

0

திருகோணமலை கன்னியா வெந்நிருற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.

கடந்த மாதம் அமைச்சர் மனோகணேசன் தலைமையிலான குழுவினர் பௌத்த குருமாருடன் கலந்துரையாடி உடைக்கப்படும் வேலைகள் தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த திங்கள் முதல் மக்கள் நடமாட்டம் இல்லாத சமயங்கள் மீண்டும் உடைக்கப்பட்டு வருகின்றது.என கன்னியாவில் இயங்கி வருகின்ற தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக உடைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களிடம் வினவிய போது உடைப் பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அதற்கான அனுமதிக்கடிதத்தை தமக்கு காட்டுவதனாக குருமுதல்வர் தெரிவிக்கின்றார்.

இக்கடிதத்திற்கான அனுமதி இன்று கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அதனைப் போல சம்மந்தபட்ட அமைச்சுக்களிடமும் ஜனாதிபதி செயலகத்திடமும் இருந்து அனுமதி பெற்று இந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உடைக்கும் தரப்பினர் தெரிவிப்பதாக குரு முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.