லதாமங்கேஸ்கர் டோனியிடம் முன்வைத்துள்ள உருக்கமான வேண்டுகோள்!

0

மகேந்திர சிங் டோனி தற்போதைக்கு ஓய்வுபெறுவது குறித்து சிந்திக்க கூடாது என இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீவிர கிரிக்கெட் ரசிகையான 89 வயதான லதாமங்கேஸ்கர் டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ளார்

டோனி அவர்களே வணக்கம் நீங்கள் ஓய்வு பெற விரும்புவதாக அறிகின்றேன் தயவு செய்து அவ்வாறு சிந்திக்கவேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவிற்கு உங்கள் கிரிக்கெட் தேவை என தெரிவித்துள்ள அவர் நீங்கள் ஒய்வு பெறுவது குறித்து சிந்திக்க கூடாது என்பது எனது விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.