ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் வழிமறித்து அழிப்பு!

0

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கி போர் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் களம் இறங்கி வான்தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இத்தகைய தாக்குதல்களால் சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆத்திரம் கொண்டு அவ்வப்போது அந்த நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அபா நகர விமான நிலையம் மற்றும் மின்நிலையம் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் ஒன்றை அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த ஆளில்லா விமானத்தை சவுதி கூட்டுப்படைகள் வழிமறித்து அழித்துவிட்டன. இதை சவுதி கூட்டுப்படைகளின் செய்தி தொடர்பாளர் துர்கி மாலிகி உறுதி செய்தார்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவதற்குள்ளாக அவர்களின் ஆளில்லா விமானம் வீழ்த்தப்பட்டு விட்டது என்று அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.