இந்தியா – பாகிஸ்தான் முறுகல் தீவிரம் – சீக்கிய பேரரசின் முதலாம் மன்னரின் சிலை உடைப்பு!

0

பஞ்சாப்பை ஆண்ட சீக்கிய இனத்தவர்களின் முதலாம் மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிலையை சில விஷமிகள் உடைத்து நாசப்படுத்தியுள்ளனர்.

இந்திய துணைகண்டத்தின் வடமேற்கு பகுதியில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் முதன்முதலாக சீக்கிய பேரரசை நிறுவியவர் மகாராஜா ரஞ்சித் சிங். சீக்கிய மதத்தவர்களின் பெருந்தலைவராகவும் ஆன்மிக குருவாகவும் அறியப்பட்ட ரஞ்சித் சிங், சுமார் 40 ஆண்டுகள் அப்பகுதியை ஆட்சி செய்து 1839-ம் ஆண்டு
மரணம் அடைந்தார்.

அவரது நினைவாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சில இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் உள்ள கோட்டையில் மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு 9 அடி உயரத்திலான வெண்கல சிலை அமைக்கப்பட்டிருந்தது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து இந்தியர்களுக்கு எதிரான கசப்புணர்வு பாகிஸ்தானியர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மன்னர் ரஞ்சித் சிங் நினைவாக லாகூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிலையை சில விஷமிகள் நேற்றி உடைத்து நாசப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீது பாகிஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

Leave A Reply

Your email address will not be published.