இந்திய அரசின் காஷ்மீர் ஒடுக்குமுறை – ஈழ விடுதலைக்கு என்ன செய்ய வேண்டும்?

0

இந்திய மத்திய அரசாங்கம் காஷ்மீர் மாநிலம் மீது பாரியதொரு ஒடுக்குமுறையை மேற்கொண்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் காஷ்மீர், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பிரதான பகுதிகள் ஒன்றிணைந்த ஒரு மாநிலம். பிரித்தானியர் ஆட்சி காலத்துக்கு முன்பு இது ஒரு தனி மன்னர் சமஸ்தானமாக காணப்பட்டு வந்துள்ளது.

காஷ்மீரை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் அதற்கு முந்தைய காலத்திலும் இடம்பெற்றதாக வரலாற்றுக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகின்றது. இந்தச் சூழலில் பிரித்தானியர்களின் உடைய ஆட்சிக்காலம் நிறைவுறும் தறுவாயில் ஜம்மு காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டது.

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உருவாகிய காலத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணையவேண்டும் என்று பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்றும் இரு நாடு சார்ந்தவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர் எனினும் 1947 ஆம் ஆண்டு வரையில் காஷ்மீர் ஒரு மன்னர் சமஸ்தானமாக ஒரு தனியான ஆட்சிப்பகுதியாக காணப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் 1947 இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீரை கைப்பற்றுவதற்கான போரை ஆரம்பித்தது. இந்த சூழ்நிலையில் அப்போதைய காஷ்மீர் மன்னர் இந்தியாவிடம் உதவி கோரினார். அதற்கு முன்பதாகவே இந்தியா காஷ்மீருக்கு உதவுவதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டது.

ஆனாலும் சில நிபந்தனைகளை இந்தியா விதித்ததால் அதாவது காஷ்மீர் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்றும் அவ்வாறு இணைந்தால் காஷ்மீருக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி பாதுகாப்பினை அளிப்பதாக அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார். இதேவேளை காஷ்மீர் மன்னர் இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார் அதாவது இந்தியா அதாவது காஷ்மீர் தனித்துவமான தனது சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்ட ஒரு மாநிலமாக இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்தார்.

இதனை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு இந்தியப் படைகள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டு காஷ்மீர் பாதுகாக்கப்படுவதுடன் ஏனைய மாநிலங்களை காட்டிலும் சிறப்பு அந்தஸ்து கொண்ட ஒரு மாநிலமாக காஷ்மீர் காணப்பட்டது. இதன் அடிப்படையில் தனியான கொடியை தனியான அரசியல் சாசனம் போன்ற தனித்துவமான அம்சங்களைக் காஷ்மீர் கொண்டிருந்தது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அதாவது இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்து கொண்ட காலப் பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீனா காஷ்மீரை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

உலகில் அழகிய பூமியாக அழகிய தேசமாக இருந்த காஷ்மீர் இதனால் போர்க்களமானது. கலவர பூமியானது இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் ஆட்சி செய்து வரக்கூடியவர்கள் மற்றும் காஷ்மீர் போராட்டக் குழுக்கள் என்பன காஷ்மீர் ஒரு தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரியது. இந்த விடயம் ஐக்கிய நாடுகள் சபை வரையில் கொண்டு செல்லப்பட்ட போதும் இந்தியா இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் தொடர்ந்தும் அந்த பகுதியில் கலவரங்களும் முரண்பாடுகளும் நீடித்தது.

இந்தநிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டத்தை இந்திய மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அத்துடன் காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் இணைந்த தனி யூனியன் பிரதேசமாகவும் ஏற்கனவே காஷ்மீர் மாநிலத்தில் இணைந்திருந்த பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் காஷ்மீரில் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டிருப்பதே பெரும் அதிர்ச்சியாகும்.

இதனால் காஷ்மீர் பகுதியில் இந்திய மத்திய அரசு தன்னுடைய செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். காஷ்மீர் சட்டபேரவையின் அனுமதியைப் பெறாமல் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் காஷ்மீரின் தனிநாடு சார்ந்த போராட்டத்தையும் முயற்சிகளையும் முறியடிக்கலாம் என இந்திய அரசு எண்ணுகிறது.

ஈழத்தில் சிங்கள அரசு வடக்கு கிழக்கு இரண்டாகப் பிரித்தது போன்ற ஒரு செயற்பாடே இந்திய மத்திய அரசு காஷ்மீரில் மேற்கொண்டுள்ளது. இந்திய அரசின் இந்த செயற்பாடு எமது விடுதலையையும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும். தனிநாடு கோரிய போராட்டத்தை காஷ்மீர் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீர் மக்களோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற எந்த விதத்திலும் பிரதிநிதித்துவ மற்ற இந்திய மத்திய அரசு அம்மாநிலத்தை அடக்கி ஆள்வது போலவே சிங்கள அரசும் வடகிழக்கு தமிழ் ஈழத்தை அடக்கி ஆண்டு வருகின்றது.

எனவே வடக்கு கிழக்கை இணைத்து தமிழர்களின் தாயகத்தை தமிழ் தேசத்தை வெல்லுகின்ற போராட்டத்தை விரிவாக்க வேண்டிய வலுப்படுத்த வேண்டிய காலம் இதுவாகும். காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்து பறிக்க போன்ற படைக்கப்பட்டவை போன்ற நிகழ்வுகள் ஈழத்தையும் பாதிக்கத்தக்கவை. எமது தலைமைகள் இந்தியா எல்லாவற்றையும் செய்யும் என்று காத்திருக்கின்றது. இது மிக தவறானது என்பதுடன் ஆபத்தானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனேயே ஈழத்தை வென்றெடுக்கலாம் என்பதை காஷ்மீர் உணர்த்துகின்றது.

ஆசிரியர்,
ஈழம்நியூஸ்.
05.08.2019

Leave A Reply

Your email address will not be published.