கவர்ச்சி ரூட்டுக்கு மாறி சூட்டை கிளப்பும் ஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன்

0

சென்னை: ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன், தான் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்ற விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

குக்கூ படத்தை இயக்கிய ராஜு முருகனின் படமான ஜோக்கர் திரைப்படம் மூலம் பிரபலமானவர் திருநெல்வேலியை சேர்ந்த நடிகை ரம்யா பாண்டியன். இவர் மானே தேனே பொன்மானே எனும் குறும்படம் மூலம் அறிமுகமானவர். டப்பாசு, ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சரியான வாய்ப்புகள் அமையாததால் ரம்யா நடித்த சில படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. இருப்பினும் அவர் ஜோக்கர் படத்தில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றார்.

பிறகு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் அவரது மனைவியாக நடித்தார் ரம்யா பாண்டியன். அதுவும் ஒரு குடும்ப பாங்கான கதை. இது வரையில் குடும்பப் பெண்ணாகவே நடித்து வந்த ரம்யா பாண்டியன் சரியான பட வாய்ப்புகளோ அல்லது சரியான படத்தை தேர்வு செய்யாத காரணத்தாலோ அவரால் தனது நடிப்பு திறனை வெளிக்காட்ட முடியவில்லை.

Ramya Pandian glamour photos goes viral in Social media

இது வரையில் அவர் கலாச்சாரமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே வெளியிட்டு வந்தவர் தற்போது கவர்ச்சி உடைக்கு மாறியிருக்கிறார். குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிப்பதால் தான் தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை என்று நினைத்தாரோ என்னவோ விரக்தியில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.

அவர் தற்போது ஒரு பிரபலமான மாத இதழுக்கு கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். அது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கிளுகிளுப்படைய வைக்கிறது. அதை பார்த்த ஏக்கத்தில் கமெண்ட்டுகளாகவும், கவிதைகளாகவும் அனல் தெரிகின்றனர் ரசிகர்கள்.

Ramya Pandian glamour photos goes viral in Social media

பல ஆண்டுகளாக இடுப்பு அழகு மற்றும் அதற்கான முக்கியதுவதையே மறந்து போன தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து இருக்கிறது இந்த புகைப்படங்கள். ஒரு பெண் திரையுலகில் தன்னை நிரூபிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பல இன்னல்களை, துயரங்களை தாண்டியே வருகின்றனர்.

ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என அல்லல்படும்போது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்கின்றனர். அப்போது அது அவர்களுக்கு வெற்றி படமாக அமையுமா என்பது கேள்விக்குறி தான். ஆனால் அதையும் தாண்டி பலர் வெற்றியும் அடைந்துள்ளனர்.

Ramya Pandian glamour photos goes viral in Social media

அதற்கு அவர்களுக்கு அமைந்த சரியான பாதை, பட வாய்ப்புகள் என பல காரணங்கள் இருக்கும். நம் தமிழ் திரையுலகில் முதலில் கவர்ச்சி மூலம் அறிமுகமாகி பிறகு சிறந்த நடிகைகளாக உருவான பலரை நம் சினிமா கண்டுள்ளது. அதை போல் ரம்யா பாண்டியனுக்கும் சிறந்த கதைக்களம் அமைந்து அவரின் நடிப்பு திறமையை நிச்சயம் வெளிக்கொண்டு வருவார்.

Leave A Reply

Your email address will not be published.