கிராமிய படத்தில் ரஜினி..! இயக்குநர் யார் தெரியுமா?

0

சூப்பர் ஸ்டார் ரஜினி,  பேட்ட படத்தினை தொடர்ந்து தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும்  யோகிபாபு, நிவேதா தாமஸ் ஆகியோரும் இப் படத்தில் நடிக்கின்றனர். மும்பையில் இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படமான ரஜினி-168 குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தினை சிறுத்தை,வீரம், வேதாளம்,விவேகம் என பல படங்களை இயக்கிய சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் எஜமான், படையப்பா சாயலில் கிராமத்து கதையாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் இதன் படப்பிடிப்பும் இன்னும் 2 மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும்,    அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.