நாட்டின் பாதுகாப்பை அரசியலாக்கக் கூடாது – ரஜினி

0

நாட்டின் பாதுகாப்பு விடயங்களை அரசியலாக்கக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காஷ்மீர் விவகாரத்தில் மோடியும் அமித்ஷாவும் இராஜ தந்திரத்தைக் கையாண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை போயஸ்கார்டின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், காஷ்மீர் விவகாரம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். பயங்கரவாதிகளின் நுழைவிடமாக காஷ்மீர் இருந்தது. ஆனால் இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் அதனை மாற்றியுள்ளார்கள்.

ஆதரவு குறைவாக இருக்கும் மாநிலங்களவையில் முதலில் மசோதாவை நிறைவேற்றி விட்டு பின்னர் மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயத்தில் அரசியல் செய்யக்கூடாது. எதை அரசியல் ஆக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ் திரைப்படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதோடு ஏமாற்றமாக உள்ளதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.