விடுதலைப் புலிகளின் உடன்படிக்கையை முறித்துக் கொண்ட அதே நாளில் கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்! (செய்திப் பார்வை)

0

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேறு பூசும் நடவடிக்கை முன்னெடுக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு-கொச்சின் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத மழை வெள்ள அனர்த்தம் காரணமாக இந்தியாவின் பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள் கடந்த ஒரு வாரகாலமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளுடனான சமாதான உடன்படிக்கையை முறித்து மஹிந்த அரசாங்கம் மிலேச்சத்தனமான போரை தொடங்கிய ஆகஸ்ட் 11ம் திகதி கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றாா்.

இது போன்ற செய்திகளோடு இன்றைய செய்திப் பார்வை அமைகிறது.

Leave A Reply

Your email address will not be published.