ஒன்றுபட்டு ஒரே குரலில் மாவீரர் நாளை கொண்டாடுவோம்!

0

2019ஆம் ஆண்டு மாவீரர் தினத்தை பொது இடங்களில் நடத்தாமல் ஒரே இடத்தில் ஒன்று பட்டு நடத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய இளைஞர் படையணி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பிரித்தானியாவில் ஒரே இடத்தில் மாவீரர் நாளை நடத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளமை மிகவும் மிகழ்ச்சியான செய்தி.

இது தொடர்பில் அந்த அமைப்பு அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில் ஒன்றுபட்டு மாவீரர் நாளை நடத்துவதன் முக்கியத்துவத்தை குறித்து தமிழ் தேசிய இளைஞர் படையணி கருத்து தெரிவித்திருந்தது. புலத்தில் மாவீரர் நாளை நடத்தும் அமைப்புகள் தொடர்பாகவும், ஒன்றுபட்டு ஒரே இடத்தில் மாவீரர் நாளை நடத்த வேண்டும் என்பது தொடர்பிலும் அந்த அமைப்பு வலியுறுத்தி இருந்தது.

காலத்திற்கு மிகவும் அவசியமான இந்தக் கோரிக்கையை பிரித்தானியாவில் மாத்திரமன்றி ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும் உணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது மாவீரர் நாளை பொருத்தவரையில் ஒன்றுபட்டு நாம் நடத்துவதே மாவீரர்களுக்கு செய்கின்ற மகத்துவமான மரியாதையாகவும் ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் அமைய முடியும்.

maveerar day க்கான பட முடிவு

தமிழர் தாயகத்தை பொறுத்தவரையில் தாயகத்து மக்கள் மாவீரர் தினத்தின் போது மிகவும் ஒன்றுபட்ட ரீதியில் உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். சிங்கள ராணுவத்தின் சிங்கள அரசின் பல்வேறு நெருக்கடிகளை மத்தியிலும் மாவீரர் தினம் கடந்த சில வருடங்களாக தாயகத்தில் இடம்பெற்று வருகின்றது. இதன் முக்கியத்துவம் கடுமையாக உணரப்படவேண்டும்.

maveerar day க்கான பட முடிவு

இந்த நிலையில் தாயக மக்களின் உணர்வுகளை உலகத்திற்கு எடுத்து உரைக்கும் விதமாக புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் ஒரு உன்னதமான நிகழ்ச்சியாக நடைபெற வேண்டியது காலத்தின் அவசியமாகும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு இடங்களில் மாவீரர் நாளை நடத்தாமல் ஒரே இடத்தில் மாவீரர் நாளை நடத்துவது ஒரு முக்கியமான வழிபாடாக அமையும்.

மாவீரர்கள் எமது மக்களுக்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தாய் நிலத்தை பாதுகாக்கவும் தங்களை ஆகுதியாக்கியவர்கள். அந்த உன்னதமான மறவர்களுக்கு உரிய வணக்கத்தையும் உரிய மரியாதையும் உரிய அஞ்சலியையும் செலுத்த வேண்டியது நமது கடமையாகும். இதில் முன்னுதாரணமாக செயற்பட்டுள்ள தமிழ் தேசிய இளைஞர் படையணிக்கு ஈழம்நியூஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.

maveerar day க்கான பட முடிவு

இந்த விடயத்தை உறுதியுடன் அர்த்தப்படுத்துவது புலத்தில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்து, எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய உதவும்.

நாம் ஒன்றுபட்டு சிங்கள அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுவே இன்றைய தேவை. நாம் ஒன்றுபட்டு பயணிப்பது ஊடாகவே எமது தேச விடுதலையின் தாய் நிலத்தையும் வெல்ல முடியும். இதற்காக நாம் அனைவரும் ஒருமித்து ஒன்றுபட்டு ஒரே பாதையில் ஒரே குரலில் நகர்ந்து நமது தேச விடுதலையை வென்றெடுக்க வேண்டும். அது மாவீரர் நாளில் இருந்து தொடங்கும்.

ஆசிரியர், ஈழம் நியூஸ் – 17.08.2019.

Leave A Reply

Your email address will not be published.