பிரித்தானியாவில் ஒரே இடத்தில் 2019 மாவீரர் நாள் – எழுச்சிக்கு அழையும் தமிழ் தேசிய இளைஞர் படையணி!

0

தமிழ் தேசிய இனத்தின் இருப்பை உலகிற்கு எடுத்துரைக்க 2019ஆம் ஆண்டு மாவீரர் நாளை ஒரே இடத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு இன அழிப்பின் பின்னர் தமிழர்கள் பிளவுபடாமல் ஒன்றுபட்டு நின்று போராடுவதை வெளிப்படுத்த இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகின்றது.

இது தொடர்பில் பிரித்தானியாவில் இயங்கும் தமிழ் தேசிய இளைஞர் படையணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் சில காரணங்களால் மாவீரர் தினத்தை கொண்டாடுவதில் ஏற்பட்ட பிளவுகளை சுட்டிக்காட்டிய இவ் அமைப்பு, இதனால் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பாதிப்பு என்றும் கூறியுள்ளது.

இதேவேளை 2009இற்கு பின்னரான சூழலில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையம் ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்து மதிப்பிட்டுள்ள மிழ் தேசிய இளைஞர் படையணி அவர்களின் கடமை குறித்தும் வலியுறுத்தியுள்ளது.

தமிழீழ மாவீரர் நாளை பிளவுபடாமல் ஒரே இடத்தில் கொண்டாடுவதே முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ள மிழ் தேசிய இளைஞர் படையணி, அதற்கான பொது இடம் குறித்தும் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முழுமையான அறிக்கை

Leave A Reply

Your email address will not be published.