முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடித்தே தீருவேன்! விஜய் சேதுபதி இறுமாப்பு!!

0

இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப்பேசும் திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார்.

மெல்பேர்னில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள நடிகர் விஜய் சேதுபதி SBS தமிழுக்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரனை மையப்படுத்தி தயாரிக்கப்படும் திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக வெளியான செய்தியையடுத்து இதுகுறித்த வாதபிரதிவாதங்கள் ஆரம்பமாகின.

குறிப்பாக முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் போர் நடைபெற்றபோதுகூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காதவர் என்றும்- போர் முடிந்தபின்னரும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை என்றும்- இக்காரணங்களால் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என ஈழப்பின்னணி கொண்ட பலரும் தமிழகத்தின் சில அமைப்புகளும் குரல் எழுப்பியிருந்தனர்.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகர் விஜய் சேதுபதி அந்த மக்களது மனங்களை நோகடிக்காமல் இப்படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமெனவும் அழைப்புவிடுக்கப்பட்டது.

நடிகர் விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகக்கூட செய்திகள் வெளியாகின.

எனினும் இச்செய்தியை மறுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி தான் அந்தப் படத்தில் நடிப்பதாக ஆஸ்ரேலியாவில் வைத்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.