‘கண்ணான கண்ணே’ பாடலை தேனாக பாடிய பார்வையற்றவர்: சினிமாவில் வாய்ப்பு அளித்த இமான்

0

கண்ணான கண்ணே பாடலை கண் பார்வை இல்லாத வாலிபர் ஒருவர் அவ்வளவு அழகாக பாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

‘கண்ணான கண்ணே’ பாடலை தேனாக பாடிய பார்வையற்றவர்: சினிமாவில் வாய்ப்பு அளித்த இமா…அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடல் சூப்பர் ஹிட்டானது. பெண் பிள்ளையை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும் பிடித்த பாடலாக மாறிவிட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்கிற கண் பார்வை இல்லாத வாலிபர் கண்ணான கண்ணே பாடலை இனிமையாக பாடியுள்ளார். அவர் பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட அஜித் ரசிகர்கள், இளம் வயதில் பெற்றோரையும், பார்வையையும் இழந்த திருமூர்த்தி தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை என்று பாராட்டினார்கள்.

அந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் இமானோ திருமூர்த்தியை தொடர்பு கொள்ள செல்போன் எண் இருந்தால் கொடுக்கவும் என்று நெட்டிசன்களிடம் கோரிக்கை விடுத்தார். இமானின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் கிருஷ்ணமூர்த்தியின் தொடர்பு எண்ணை அளித்தனர்.

இதையடுத்து உரிய நபரிடம் பேசிவிட்டேன். திருமூர்த்திக்கு விரைவில் பாட வாய்ப்பு கொடுப்பேன். கடவுள் அவருடன் இருக்கட்டும். திருமூர்த்திக்கு இனி மகிழ்ச்சியான நாட்கள் என்று ட்வீட் செய்துள்ளார் இமான். அவரின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர்.

இமானை போன்று நீங்களும் திருமூர்த்திக்கு பாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷிடம் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக மேற்கு வங்க மாநில ரயில் நிலையத்தில் அமர்ந்து லதா மங்கேஷ்கரின் பாடலை அழகாக பாடிய ரணு மோண்டலின் வீடியோ வைரலாகி அவருக்கு பாலிவுட் படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் திருமூர்த்திக்கு அதே போன்று நல்லது நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.