வவுனியாவில் சீரடி பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டும் அதிசயம் – காண படையெடுக்கும் மக்கள்

0

வவுனியா உக்கிளாங்குளத்தில் உள்ள வீடொன்றில் பூஜை அறையில் வைக்கபட்டுள்ள சீரடி சாய்பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டுவதாக தெரிவிகப்படுகின்றது.

இதனையடுத்து அங்கு பாபா பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

உக்கிளாங்குளம் குட்டிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் வழிபடப்பட்டு வந்த சீரடி பாபாவின் படத்தில் இருந்தே கடந்த சனிக்கிழமை முதல் திருநீறு கொட்டுவதாக கூறப்படுகின்றது.Advertisement

குறித்த வீட்டில் இருந்த சீரடி பாபாவின் பல புகைப்படங்களில் திருநீறு வீசப்பட்டது போன்று காட்சியளித்ததோடு படத்தின் கீழும் திருநீறு காணப்பட்டிருந்ததாக அங்கு சென்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தாம் 10 வருடங்களாக பாபாவை வணங்கி வருவதாகவும் புலம் பெயர் தேசத்தில் இருக்கும் தமது மகளின் வீட்டிலும் இவ்வாறு அதிசயம் இடம்பெற்ற நிலையில் தற்போது அவரது வவுனியா வீட்டிலும் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளதாகவும் குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.