ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கும் டிரம்புக்கும் இடையில் காதலா?

0

ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அரசியலிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த இவர், 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக இருந்துள்ளார்.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் என்றபோதும் டிரம்ப்புக்கும், அர்னால்டுக்கும் இடையே கருத்தியல் ரீதியாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

குடியுரிமை உள்பட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை அர்னால்டு கடுமையாக விமர்சித்தார். அதே போல் டிரம்ப்பும், அர்னால்டின் கருத்துகளுக்கு பலமுறை கிண்டலாக பதிலளித்திருக்கிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல இதழ் ஒன்று அண்மையில் அர்னால்டிடம் பேட்டி கண்டது.

அப்போது அவரிடம், “உங்களுக்கும், டிரம்ப்புக்கும் இடையிலான பகைமையின் காரணம் என்ன? உங்கள் மீது அவர் கூறும் விமர்சனங்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அர்னால்டு “டிரம்ப் என் மீது காதல் கொண்டிருக்கிறார். அவர் என்னை போல் இருக்க விரும்புகிறார். இதுதான் உண்மை. மக்கள் அமெரிக்காவை எவ்வளவு தூக்கி வீசினாலும், மக்கள் ஜனாதிபதியை பார்த்து எவ்வளவு சிரித்தாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அமெரிக்கா வரவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நன்கு தெரியும். ஒரு மனிதர், ஒரு ஜனாதிபதியால் அமெரிக்கா மாறிவிடாது” என பதிலளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.