துப்பாக்கி முனையில் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்ட பெண்: பெற்றோரிடம் ஒப்படைப்பு

0

பாகிஸ்­தானில் கடத்­தப்­பட்டு கட்­டாய மத­மாற்றம் செய்­யப்­பட்ட சீக்­கிய பெண் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு அவ­ரது பெற்­றோ­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

பாகிஸ்­தானின் லாகூர் நங்­கனா சாகிப் பகு­தியைச் சேர்ந்த சீக்­கிய குருத்­வாரா தலை­வரின் 19 வயது மகளை கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு, அப்­ப­கு­தியைச் சேர்ந்த இளை­ஞர்கள் சிலர் கடத்திச் சென்­றுள்­ளனர்.

இதற்­கி­டையே, கடத்­தப்­பட்ட பெண்ணை துப்­பாக்கி முனையில் மிரட்டி கட்­டா­யப்­ப­டுத்தி, இஸ்லாம் மதத்­திற்கு மாற்­றி­ய­தா­கவும், பின்னர் இஸ்­லா­மியர் ஒரு­வ­ருக்கு அவரை திரு­மணம் செய்து வைத்­த­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இதே­வேளை, தங்கள் வீட்டுப் பெண் விடு­விக்­கப்­பட்டு பாது­காப்­பாக வீடு திரும்ப தங்­க­ளுக்கு உதவி செய்­யு­மாறு பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான், மற்றும் பாகிஸ்தான் இரா­ணுவ தள­பதி ஆகி­யோ­ரிடம் குறித்த பெண்ணின் பெற்­றோர்கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.

இது தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலை­யத்தில் செய்­தி­ருந்த முறைப்­பாட்டை மீளப் பெறு­மாறு அந்த குழு­வினர் தங்­களை மிரட்­டு­வ­தா­கவும் அந்த குடும்­பத்­தினர் குற்­றம்­சாட்­டியிருந்தனர். இச்­சம்­ப­வத்­துக்கு பாகிஸ்­தானில் உள்ள சீக்­கிய அமைப்­புகள் கடும் கண்­டனம் தெரி­வித்­தி­ருந்­தன.

இந்­நி­லையில், அந்த பெண் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.